டீசர்
டீசர்
சொன்னாலும் கேட்பதில்லை எந்தன் மனது!
கடைவீதியில் வேடிக்கை பார்த்தவாறு தோழியுடன் நடந்துக் கொண்டிருந்த தீப்தி.. அங்கு சந்து போன்று இருந்த பகுதியில் கூட்டமாக ஆண்கள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தாள்.
“அங்கே என்ன கூட்டம்னு பார்க்கலாம் வா காயு..”
“விவகாரமா எதாவது இருந்துட்டா என்ன செய்ய!” என்று பயத்துடன் கேட்டாள்.
“அந்த மாதிரி எதாவது இருந்தா.. ஒடி வந்திரலாம். சிம்பிள்!” என்று தோள்களைக் குலுக்கிவிட்டு.. அவளை இழுத்துக் கொண்டு சென்றாள்.
அங்கு இருந்த கூட்டத்திற்கு இடையே எட்டிப் பார்த்தப் பொழுது… அங்கு சூதாட்டம் நடைப்பெறுவதைப் பார்த்தாள்.
மூன்று டம்ளர்களை வைத்து ஒருவன் சுற்றிக் கொண்டிருக்க.. எதில் டைஸ் இருக்கிறது என்று பந்தயம் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அதைப் பார்த்த தீப்தி தனது தோழியிடம் “இன்னைக்கு நம்ம அதிர்ஷ்டம் எப்படியிருக்குனு பார்த்திரலாமா..” என்றுவிட்டு தனது கைப்பையில் கிடைத்த கத்தை நோட்டை எண்ணிக் கூடப் பார்க்காமல்.. “இந்த கிளாஸில் டைஸ் இருக்கு பெட் கட்டரேன்.” என்று அமர்ந்தாள்.
நெற்றியைச் சுற்றி கர்சீப்பை கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தவன், நிமிர்ந்துப் பார்க்கவும், அவனை நன்றாக பார்த்த தீப்தி அதிர்ந்தாள்.
அப்பொழுது விசிலை ஊதியவாறு இரண்டு காவல்துறையினர் வரவும், அங்கிருந்தவர்கள் தெறித்து ஓடினார்கள். தரையில் விரிந்திருந்த டவலுடன் அள்ளி பையில் திணித்தவன், ஓடத் தொடங்கினான். பின் ஏதோ தோன்ற திரும்பிப் பார்த்தான். திருதிருவென விழித்தவாறு நின்றுக் கொண்டிருந்தவளையும் பற்றிக் கொண்டு ஓட ஆரம்பித்தான்.
—----------------------------------------------
“என்ன வேணும் உனக்கு? ஒண்ணும் தெரியாதவ மாதிரி.. என் பேமலியை ஏமாத்தியது மாதிரி என்னை ஏமாத்த முடியாது..” என்று ஆர்யா எரிந்து விழுந்தான்.
அதற்கு தீப்தி “நான் என்ன செய்தேன்? ஏன் இப்படிக் கோபப்படறே?” என்று புரியாது கேட்டாள்.
“ஹெ! நீ என்ன செய்யறேன்னு உனக்கு தெரியாதா! என்னை எதுக்கு சுத்தி வரே? என்னை எதுக்கு சீண்டுறேனு தெரியாதவன்னு என்னை நினைச்சுட்டியா! அந்த அளவுக்கு வீக்கான ஆளா நானு..”
“என்ன சொல்றே.. டைரக்ட்டா சொல்லு! எதுக்கு நான் இதெல்லாம் பண்றேன்னு நினைக்கிறே?” என்று சலிப்புடன் கேட்டவளின் கரம் பற்றித் தன்னை நோக்கி இழுத்தவன், “சொல்வதை விடச் செய்துக் காட்டுக்கிறேன்.” என்று அவளது செவ்விதழ்களை வசம் செய்தான்.
—----------------------------------------------
“ஆர்யா நில்லு! அவங்க எல்லாம்.. என் ரிலேட்டிவ்ஸ்! என் மேலே பாசம் வைத்திருக்கிறவங்க! என் ரிலேட்டிவ்ஸ் என்றால் என் ஹஸ்பென்ட் ஆனா உனக்கு ரிலேட்டிவ்ஸ் தான்! அவங்க கிட்ட இப்படித்தான் பிஹேவ் செய்வியா?” என்று கேட்டவாறு காரிடரில் வேகமாக நடந்துக் கொண்டிருந்த ஆர்யாவின் பின்னால் கிட்டத்தட்ட ஒடினாள்.
தனது கழுத்தில் இருந்த டையை கழற்றி வீசியவாறு வேகத்தை குறைக்காமல் நடந்துக் கொண்டிருந்த ஆர்யா “ஆமா நான் வேணும் என்று தான்.. அப்படிச் செய்தேன். உனக்கு அவமானமா இருக்கா.. அதுதான் எனக்கு வேணும்.” என்றுவிட்டு முடிவில் சத்தமாக சிரித்தான்.
தீப்தி விக்கித்து நின்றுவிட்டாள்.
- 1 Forums
- 2 Topics
- 3 Posts
- 0 Online
- 29 Members
