Forum

Notifications
Clear all

மனம் 1

2 Posts
1 Users
0 Reactions
76 Views
rajianbu
(@rajianbu)
Admin Admin
Joined: 10 months ago
Posts: 3
Topic starter  

ஹாய் பிரெண்ட்ஸ்.. இது பக்கா டெம்ப்ளேட் ஆன்டி ஹீரோ கதை.. நான் ட்ரை செய்தால் எப்படியிருக்கும் என்று பார்க்கிறேன். சோ வழக்கமான பாணியை எதிர்பார்க்காதீர்கள்.. ஆனால் தானாக எனது பாணி இணைந்துக் கொள்ளலாம்😁 என்சாய் ரீடிங்.. மறக்காமல் தங்களது கருத்துக்களை பதிவிடுங்கள்‌.

 

 

 



   
Quote
rajianbu
(@rajianbu)
Admin Admin
Joined: 10 months ago
Posts: 3
Topic starter  

அத்தியாயம் 1

 

“ஆர்யா! நான் சொன்னது ஞாபகம் இருக்கு தானே! அப்பா கிட்ட காமா.. மரியாதையா பேசணும்.” 

 

ஆனால் அவனோ வேறு கேட்டான்.

 

“உன்‌ அப்பா ஒத்துக்கலைன்னா.. என்கிட்ட பிரெக்அப் செய்துப்பியா?”

 

“நான் என்ன சொல்றேன்.. நீ என்ன‌ சொல்றே!” என்று தீப்தி சிணுங்கினாள்.

 

“ப்ச்! இதுதான் பதில்! நான் எப்படியிருக்கேனோ.. அப்போ எப்படி பிஹேவ் செய்வோனோ அப்படித்தான் இருப்பேன். என்னால நடிக்க எல்லாம் முடியாது.”

 

“எனக்காக பண்ண மாட்டியா!”

 

“முடியாது.”

 

ஆர்யா அவ்வாறு கூறியது.. தீப்திக்கு முகத்தில் அடித்தது போன்று இருந்தது. அவனை வெறித்துப் பார்த்தவாறு நின்றிருந்தவளின் பின்னந்தலையில் கையை வைத்து இழுத்து.. அவளது இதழ்களை ஆக்ரமித்தான். அவனிடம் இருந்து விலக போராடியவளால் ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை. முடிவில் அவனிடம் சரணடைந்தாள்.

 

முறுவலுடன் நிமிர்ந்த ஆர்யா அவளது மூக்கு நுனியில் சிறு முத்தமிட்டு “இன்னொரு பதிலையும் கேட்டுக்கோ! உன் அப்பா மறுத்தாலும் சரி.. நீயே என்னை விட்டு பிரிய நினனைத்தாலும் அது முடியாது தீப்தி! யு ஆர் மைன்! திஸ் இஸ் அவர் டிஸ்டனி!” என்றுவிட்டு மீண்டும் அவளது இதழ்களில் மூழ்கினான். 

 

ஆனால் அடுத்த அறையில் அவனுக்காக அவளது தந்தை காத்துக் கொண்டிருப்பது தான்.. தீப்தியின் மூளைக்குள் ஓடியது. அதனால் அவனிடம் இருந்து விலக நினைத்த அதே மனது.. அவனது உரிமையிலும்.. ஆண்மையிலும் கரைந்தது.

 

சில நிமிடங்கள் கழித்து மெதுவாக எவ்வித அலட்டலும் இல்லாமல் அறையினுள் நுழைந்தவனிடம் எடுத்த எடுப்பில் தீப்தியின் தந்தை சதாசிவம் “ஆர்யா! உன்னோட உள்நோக்கம் தெரியாம என் பொண்ணு உன் மேலே ஆசைப்பட்டு.. உன்னைக் கூட்டிட்டு வந்துட்டா! நீயெல்லாம் என் பொண்ணோட நிழலைத் தொடக் கூடத் தகுதி இல்லாதவன்! மரியாதையா தீப்தியை விட்டுப் போயிரு! இல்லைன்னா.. பின்விளைவுகள் பயங்கரமா இருக்கும்! நான் உன்னை வார்ன் செய்யறேன்.” என்று சதாசிவம் எச்சரித்தார்.

 

 அதைக் கேட்டு சிரித்த ஆர்யா “மிஸ்டர் சதாசிவம்! உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா! நிழலை யாரும் தொட்டுப் பார்க்க நினைக்க மாட்டாங்க! அது எப்பொழுதும் தரையில் தான் கிடந்து காலில் தான் மிதிப்படும். இங்கே உன்னோட பொண்ணோட நிழலை மட்டுமில்லை. உன் பொண்ணையே போட்டு மிதிக்க போறேன்.‌ அவ அலறுவதைப் பார்த்து உன்னை கதற வைக்கிறேன்.” என்று இடியென சிரித்தான்.

 

-----------------------------------------------------------------------------

 

ஒரு மாதத்திற்கு முன்பு..

 

“தீப்தி! தீப்தி! நில்லு தீப்தி! சொன்னா கேளு! நான் என்ன சொல்லிட்டேன்னு இப்போ உன் அப்பா கிட்ட கம்பளைன்ட் பண்ணப் போறே!” என்று தீப்தியின் அன்னை சகுந்தலா அவளது பின்னாலேயே கெஞ்சிக் கொண்டு வந்தார்.

 

வளைந்து செல்லும் படிக்கட்டில் தொப்பு தொப்பு என்று கால்களை வைத்தவாறு கோபத்துடன் இறங்கிக் கொண்டிருந்த தீப்தி தனது அன்னை கூறியதைக் கேட்டு வெடுக்கென்று திரும்பி நின்று முறைத்தாள்.

 

“என்ன சொன்னியே! எப்போ பாரு! கல்யாணம் செய்துக்கோ! கல்யாணம் செய்துக்கோன்னு பாட்டு பாடரே!”

 

“என்னது உன் அம்மா பாட்டு பாடறாளா! காதுல இரத்தம் வழியுமே! உன் அம்மாவை பைத்தியக்கரா டாக்டர் கிட்டயும் உன்னை காது டாக்டர் கிட்டக் கூட்டிட்டு போகட்டுமா தீப்திமா!” என்றவாறு தீப்தியின் தந்தை சதாசிவம் வந்தார்.

 

“அப்பா!” என்று மீதியிருந்த படிக்கட்டுகளை இரண்டு இரண்டாக தாண்டிக் கொண்டு தனது தந்தையை நோக்கி ஓடினாள்.

 

அவரோ “பார்த்து வாம்மா!” என்றுப் பதறினார்‌.

 

ஓடிச் சென்று தனது தந்தையின் கழுத்தைக் கட்டிக் கொண்ட தீப்தி சலுகையுடன் அவர் மீது சாய்ந்துக் கொண்டு “இந்த அம்மா என்ன சொல்றாங்க பாருப்பா!” என்று தந்தையிடம் முறையிட்டு விட்டு மீண்டும் அன்னையை முறைத்தாள்.

 

சதாசிவம் “என் பொண்ணு கிட்ட அவ கோபப்படும்படி என்ன சொன்னே!” என்று அதட்டினார்.

 

ஆனால் சிறு புன்னகையுடன் சகுந்தலா அவர்களை நோக்கி வந்தார்.

 

மகளிடம் திருமணம் விசயமாக பேசச் சொல்லி கடந்த ஒரு மாதமாக நச்சரிப்பதே சதாசிவம் தான்! 

 

இருபத்தி மூன்றே வயதான தனது ஒரே மகளுக்கு தற்பொழுது திருமணம் செய்து வைப்பதில் சகுந்தலாவிற்கு சிறிதும் விருப்பமில்லை. 

 

ஆனால் சதாசிவம் தீப்திக்கு திருமணம் செய்து வைப்பதில் உறுதியாக இருந்தார்.

 

சகுந்தலா தீப்தி சின்ன பெண்.. வயது இருபத்தி மூன்று தான் ஆகிறது. இன்னும் இரண்டு வருடங்கள் போகட்டும் என்று தள்ளிப் போடப் பார்த்தார். ஆனால் சதாசிவம் ரூத்திரமூர்த்தியாக நிற்கவும், கணவனின் கோபத்தினை அதற்கு மேல் தாங்கிக் கொள்ள இயலாது சகுந்தலா பெண்ணிடம் வற்புறுத்த ஆரம்பித்தார். 

 

தற்பொழுது.. இதற்கு எல்லாம் காரியக்கர்த்தவான சதாசிவத்திடமே.. பெண் சென்று முறையிடவும், சகுந்தாவினால் புன்னகைக்க தான் முடிந்தது. 

 

ஏனெனில் திருமணம் ஆகி பத்து வருடங்கள் கழித்து பிறந்த மகளான தீப்தியிடம் பெற்றோர்கள் இருவரும் கண்டிப்பு காட்டியதில்லை. அன்பை மட்டுமே பொழிந்திருக்கிறார்கள். 

 

இதில் சதாசிவம் மகளிடம் பாசம் காட்டுவதில் கூட சுயநலம் மிக்கவர், மகளின் பார்வையில் அவர் ஒரு ஹீரோவை போலவும், அன்னையை விட அவர் தான் மிகவும் பாசம் வைத்திருப்பது போலவும் காட்டிக் கொள்வார். 

 

எனவே தற்பொழுது தீப்திக்கு திருமணப் பேச்சு எடுத்தது தான் என்று சதாசிவம் நிச்சயம் காட்டிக் கொள்ள மாட்டார் என்று சகுந்தலாவிற்கு தெரியும். எனவே புன்னகையுடன் வந்தார்.

 

சதாசிவம் சகுந்தலாவை அதட்டவும், தீப்தி “அம்மா என்னை கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யவான்னு கேட்டு தொல்லை பண்றாங்க அப்பா! நான் இப்போ கல்யாணத்தை கேட்டேனா! நான் என்ன கேட்டாலும் வாங்கித் தருவீங்க! அதே மாதிரி நான் எப்போ கல்யாணத்தை கேட்கிறேனோ.. அப்போ பண்ணி வையுங்க அப்பா..” என்று கொஞ்சினாள்.

 

சதாசிவம் “அட என் பொண்ணு இவ்வளவு பெரிய பொண்ணு ஆகிடுச்சா! தனக்கு எப்போ கல்யாணம் வேணுன்னு தெரியுற அளவுக்கு!” என்று வியக்கவும் “அப்பா” என்று என்று அவரது தோளில் சலுகையுடன் சாய்ந்தாள்.

 

சிரித்த சதாசிவம் “சரிடா! நீ சொன்ன மாதிரியே செய்துறேன். ஆமா உன் அம்மா.. யாரை கல்யாணம் பண்ணிக்கோன்னு டார்ச்சர் செய்கிறாள்? என் பொண்ணுக்கு ஏற்ற மாதிரி மாப்பிள்ளை பார்த்து வைத்திருக்கிறாளா! உன் அம்மாக்கு அத்தனை அறிவில்லையே!” என்று மகளின் அபிமானத்தை பெற.. தனது மனைவியை கேலி செய்தார்.

 

தனது தந்தையுடன் சேர்ந்து சிரித்த தீப்தி “யார் தெரியுமா அப்பா! சர்வேஷை தான் அம்மா செலக்ட் செய்திருக்கா! நல்ல காமெடி..” என்று சிரிப்பைத் தொடர்ந்தாள்.

 

சதாசிவமோ “சர்வேஷா! அட பரவாலையே! உன் அம்மாக்கு கூட அறிவு இருக்கு! வேற யாராவது செலக்ட் செய்திருந்தால்.. நிச்சயம் சண்டைக்கு போயிருப்பேன். சர்வேஷ் அப்பாக்கு இப்போதெல்லாம் அவன் தான் ஐடியா தரான். கிட்டத்தட்ட அவன்தான் கம்பெனியை பார்த்துக்கிறான் என்று சொல்லலாம். அறிவு இருந்தா பத்தாது அழகும் வேணுன்னு சண்டை பிடிக்கலான்னு பார்த்தா.. ஆளும் செமையா இருக்கானே! எனக்கு தெரிந்து.. சர்வேஷை பல தொழிலதிபர்கள் அவங்களோட மகளுக்கு மாப்பிள்ளையாக ட்ரை செய்துட்டு இருக்காங்க! ஆனா எனக்கு என்னவோ உன் அம்மா இதுக்கு எல்லாம் மசிந்து இருக்க மாட்டா! சர்வேஷ் பக்கத்து எஸ்டேட் தான்! உன் அம்மாக்கு உன்னை விட்டு முற்றிலும் பிரிந்த மாதிரி இருந்திருக்காது. அதுதான் காரணமாக இருந்திருக்கும்.” என்றார்.

 

தீப்தி என்ன கூறுவது என்று தெரியாது. தனது தந்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது மனதில் ‘சர்வேஷ்’ எலிஜிபிளான ஆள் தான் போல என்று தோன்றியது.

 

சதாசிவம் தொடர்ந்து “அதெல்லாம் சரி! என் பொண்ணு என்ன அவ்வளவு மட்டமா! அவனுக்கு வருகிற வரன்கள் க்யுவில் நிற்கிறதுக்கு! அப்படி ஒண்ணும் அவசியமில்லை.” என்றார்.

 

அப்பொழுது சகுந்தலா “சரவணன் அண்ணா தான்! நம்ம தீப்தியை அவங்க பையனுக்கு கேட்டாங்க! கேட்டு ஒரு மாசம்..” என்றுவிட்டு இருமியவர், பின் தொடர்ந்து “கேட்டு பத்து நாளாச்சு! முதல்ல தீப்திக்கு ஒகேவான்னு கேட்டுட்டு அப்பறம் உங்க கிட்டச் சொல்லலாம் என்று இருந்தேன். தீப்தி என்ன சொன்னாலும் உங்களுக்கு தான்.. ஒகேவாச்சே!” என்றார்.

 

சதாசிவம் “அதுதானே பார்த்தேன். என் பொண்ணோட மதிப்பைப் பற்றி எனக்கு தெரியும். ம்ம் நல்ல வரன் தான்! யோசிச்சு சொல்றேன்னு சொல்லிடலாமா தீப்தி!” என்றார்.

 

“ம்ம்! ஆமாப்பா! நான் யோசிக்கணும்.” என்று தந்தையின் வலையில் விழுந்தது தெரியாது பதிலளித்தாள்.

 

அப்பொழுது அவளது கையில் இருந்த செல்பேசி ஒலிக்கவும், தீப்தி “சொல்லு காயு..” என்றவாறு அங்கிருந்து ஓடினாள்.

 

மகள் சென்ற பிறகு சதாசிவம் அவரைப் பார்த்தவாறு நின்றிருந்த மனைவியைப் பார்த்தார். சிரித்தவாறு அவரது தோளில் கையைப் போடவும், “ப்ச்! என்னங்க இது!” என்று கூச்சத்துடன் கையை எடுக்க முயன்றார்.

 

“என் பொண்டாட்டி மேலே தானே கையைப் போடறேன். சக்கு என் மேலே கோபமா!”

 

“என்னங்க இது கேள்வி எல்லாம் புதுசா இருக்கு! நீங்க எவ்வளவு பெரிய சமார்த்தியசாலினு தான் தெரியுமே! நான் பத்து நாளா சாதிக்க முடியாததை இரண்டே நிமிஷத்தில் சாதிச்சுட்டிங்களே! இவ்வளவு புத்திசாலித்தனம் இல்லாமாலா.. ஐந்து வருஷத்தில் நூறு கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியாகி.. இப்போ ஐநூறு கோடிக்கு அதிபதியாக நிற்கிறீங்க! அதே சமயத்துல குடும்பத்தையும் சரி சமமா பார்த்துக்கறீங்க! பாசமா இருக்கீங்க! இதுக்கு மேலே எனக்கு என்ன வேண்டும்.”

 

“சோ நான்தான் பெஸ்ட்!”

 

“கண்டிப்பா!”

 

“தீப்திக்கும் நான்தான் பெஸ்ட்?”

 

“இல்லையா பின்னே!”

 

அதைக் கேட்டு சிரித்தவர், மனைவியின் கன்னத்தை நிமிட்டி மேலும் அவரைக் கூச்சப்பட வைத்துவிட்டுச் சென்றார்.

 

வெட்கத்துடன் சிரித்த சகுந்தலா சென்றுக் கொண்டிருந்த கணவரைப் பார்த்தார். அவரது உதட்டில் இருந்த சிரிப்பு மெல்ல உறைந்தது.

 

மெல்ல அவரது வாய் முணுமுணுத்தது.

 

“உங்க சுயநலத்

தால்.. என் வாழ்க்கையில் கணவனாய் ஆட்டி வைத்த மாதிரி.. பொண்ணு வாழ்க்கையில் அப்பாவாய் ஆட்டி வைக்காதீங்க..” 

 



   
ReplyQuote
Share: